தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரனின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தர்ஷினிக்கு கல்யாணம் பண்ண துடியாய் துடித்து வருகிறார். அவரை எதிர்த்து போராடியவர்கள் பெண்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்போது அதிரடி என்ட்ரி கொடுக்க உள்ளார் அப்பத்தா.
குணசேகரனின் அப்பத்தாவாக நடித்து வருகிறார் பாம்பே ஞானம். இவர் இறந்தது போல காட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகா பாம்பே ஞானத்துடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதி செய்துள்ளார். இதனால் எதிர் நீச்சல் சீரியல் மீண்டும் பழைய பார்முக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bombay Gnanam Entry in Ethir Neechal serial