தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ஷான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. மாறுபட்ட கதை களத்துடன் வெளியாகி இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் டெலிகிராம் மூலமாக இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படத்தை பாராட்டி இயக்குனரை டேக் செய்து பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இயக்குனர் ஷான் பைரஸியில் படம் பார்த்து பாராட்டிய அந்த ரசிகருக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் விரைவில் நல்ல பிரிண்ட் Zee5 தளத்தில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபீலிங் எல்லாம் இல்ல, அது வலி வேற டிபார்ட்மெண்ட் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.