Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் 61 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்

Boney Kapoor About Ajith 61 Movie Release

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் மாஸ் காட்டியது.

இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ajith 61 என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். வில்லனாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் நடிக்கிறார் என்று தெரிய வந்தது. இந்த நிலையில் போனிகபூர் அளித்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை மாதத்தில் நிறைவடையும் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த வருட தீபாவளி தல தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Boney Kapoor About Ajith 61 Movie Release
Boney Kapoor About Ajith 61 Movie Release