Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் மட்டுமல்லாமல் இந்தியிலும் நல்ல வரவேற்பு பெற்ற வலிமை.. அதிகாரபூர்வமாக அறிவித்த போனிகபூர்.! இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா.?

Boney Kapoor About Valimai Movie Collection

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை 200 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். இந்தியிலும் இந்தப் படம் நல்ல வசூலை ஈட்டி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் இந்த படம் வரும் மார்ச் 25ஆம் தேதி ஜீ 5 இணையதளத்தில் வெளியாக உள்ளது என அறிவித்துள்ளார். இவருடைய இந்த வசூல் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.