தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “வலிமை படத்தின் ஒரு சண்டை காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது.
அதை தவிர்த்து முழு படப்பிடிப்பும் பிப்ரவரி 15க்குள் முடிவடையும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என போனி கபூர் தெரிவித்துள்ளார்.