அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் கடந்தாண்டு பூஜையுடன் தொடங்கப்பட்டதுக்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது. குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை.
இதனால் கடும் கோபத்தில் இருக்கு அஜித் ரசிகர்கள், அப்டேட் கேட்டு அடிக்கடி அன்புத்தொல்லை செய்வதும் உண்டு. நேற்று கூட டுவிட்டரில் ‘காத்திருக்கிறோம்தல’ என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கினர்.
வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டன்று வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், போனி கபூர் கொடுத்த அப்டேட் அஜித் ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியது.
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர், அதே படத்தை தெலுங்கில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இதில் அஜித் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக போனி கபூர் டுவிட்டரில் பதிவிட்டதை பார்த்த அஜித் ரசிகர்கள், வலிமை அப்டேட்ட தவிர மத்த எல்லா அப்டேட்டும் கொடுக்குறீங்களே, ஏன் எங்கள இப்படி சோதிக்கிறீங்க என ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
And it's a wrap for @PawanKalyan on #VakeelSaab sets. We all had a BLAST working with the Power Star 🔥
The POWER will unleash very soon!#SriramVenu @i_nivethathomas @yoursanjali @AnanyaNagalla @SVC_official @BayViewProjOffl @BoneyKapoor @MusicThaman pic.twitter.com/M5uOArzIt3— Boney Kapoor (@BoneyKapoor) December 29, 2020