பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர் களில் ஒருவராக வலம் வருபவர் போனி கபூர். நடிகை ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் போனி கபூரின் முதல் மனைவிக்கு அர்ஜுன் கபூர் என்ற மகனும் உள்ளார்.
தற்போது அர்ஜுன் கபூர் தான் சிரித்து 10 வருடம் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார். எல்லோரும் உங்கள் முகத்தில் சிரிப்பு இல்லை என கூறுகின்றனர். நான் சிரித்து 10 வருடம் ஆகிவிட்டது என எப்படி அவர்களிடம் சொல்வது என்று உருக்கமாக தன்னுடைய தாயாரின் மறைவு குறித்து பேசியுள்ளார்.
இது அவரது ரசிகர்களை சோகமடைய செய்துள்ளது.