பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி தயாரிப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் போனி கபூர். இவரது தயாரிப்பில் வரும் பொங்கல் பண்டிகைக்கு தல அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படம் பற்றின அப்டேட்களை அவ்வப்போது பதிவிட்டு வரும் போனி கபூர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ‘லவ் டுடே’ திரைப்படம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
அதாவது கோமாளி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரதிப் ரங்கநாதன் இயக்கம் மற்றும் நடிப்பில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த லவ் டுடே திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றி இருப்பதாக வதந்திகள் இணையதளத்தில் பரவி உள்ளன.
தற்போது இது தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை”. என்று பதிவிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.