Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய், முருகதாஸ் இரண்டாவது முறையாக இணைந்த கத்தி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் என்ன தெரியுமா? – முழு விவரம் இதோ.!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிக்க வந்ததில் இருந்து ஒரே மாதிரியான ஸ்டைலில் நடித்து வந்த விஜய் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இருப்பினும் தளபதி விஜய்யை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி திரைப்படம் தான்.

விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கத்தி படத்திற்காக ஒன்றிணைந்தனர்.

இந்த கத்தி திரைப்படம் ரூபாய் 70 கோடி பட்ஜெட்டில் உருவானது. உலகம் முழுவதும் இப்படம் ரூபாய் 130 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இன்று வரை படம் விஜய் ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மீண்டும் தளபதி 65 படத்தில் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.