தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வருபவர் தான் பிருந்தா. இவர் இயக்கிய “ஹேய் சினாமிகா”என்ற படத்தைத் தொடர்ந்து தற்போது ஆக்சன் பிலிம் ஒன்றை இயக்கவுள்ளார்.
இந்த படத்தை எச். ஆர். பிச்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க உள்ளார். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்ற பல மொழிகளில் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தை முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல் தேசிங்கு பெரியசாமி, லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குனர்களின் முன்னிலையில் வைத்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று வெளியிடப்போவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.