தமிழ் சினிமா போல தெலுங்கு சினிமாவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். சீனியர் நடிகர்களே இன்னும் ஹீரோக்களாக நடித்துக்கொண்டிருக்க வாரிசு நடிகர்களும், இளம் நடிகர்களும் களத்தில் இறங்கி தங்களுக்கான மார்க்கெட்டையும் பிடித்து வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு தனி இடம் இருக்கிறது. அவரின் படங்களும் உள் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தி வருகின்றன.
அதில் கடைசியாக அல வைகுந்த புரமுலு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
திரிவிக்ரம் இயக்கத்தில் இப்படத்தில் அல்லுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். ஜெய ராம், நிவேதா பெத்துராஜ், சமுத்திரகனி, நவ்தீப், தபு என பலர் நடித்திருந்தனர்.
தமன் இசையில் புட்ட பொம்மா பாடல் அனைவரையும் ஈர்த்த ரகமானது. பிரபலங்கள் கூட இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர். தற்போது இப்பாடல் 450 மில்லியன் பார்வைகளை அள்ளி சாதனை படைத்துள்ளது.
ரசிகர்களில் ##UNSTOPPABLEAVPLALBUM #avpl #ButtaBomma #450millionforbuttabomma என பல டேக் இட்டு டிரெண்டிங்கில் இடம் பெற செய்து கொண்டாடி வருகிறார்கள்.
#UNSTOPPABLEAVPLALBUM #avpl
Our #ButtaBomma HITS #450millionforbuttabommaMy love to My dear brother @alluarjun My Respect to #Trivikram gaaru 🎵@ramjowrites @ArmaanMalik22@vamsi84 #radhakrishna gaaru #alluarvindh gaaru #pdprasad gaaru
Team @haarikahassine @GeethaArts pic.twitter.com/4dmsqEzDZh
— thaman S (@MusicThaman) November 24, 2020