2020 ம் ஆண்டின் அநேக மாதங்கள் இந்த கொரோனா தாக்குதலால் ஊருக்குள்ளும், வீட்டிற்குள்ளும் முடக்கிப்போட்டு விட்டன. கடந்த இரண்டு மாதங்களாக இயல்பு திரும்பியுள்ளதை காணமுடிகிறது.
சினிமாவிலும் இதனால் பெரும் நஷ்டம் தான். படப்பிடிப்பு ரத்து, தியேட்டர்கள் மூடலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டுமே படங்கள் வெளியாகின. மார்ச் மாதத்தில் வந்த படங்கள் பாதியிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானது.
ஓடிடி தளத்திலும் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. டிஜிட்டல் தளம் மிகுந்த பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இதனால் இணையதளத்தில் படங்களை பார்ப்பதிலும், பாடல்களை ஸ்டீர்ம் செய்து கேட்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தெலுங்கில் இவ்வருடம் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட பாடல் ஆல்பம் வரிசையில் முதலிடம் பெற்றிருப்பது 178 மில்லியன் ஸ்ட்ரீம்ஸ் பெற்ற அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுந்தபுரமுலு படம் தான். 2 ம் இடத்தில் 73.3 மில்லியன் ஸ்ட்ரீம் பெற்ற மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீக்கெவரு படம் இடம் பிடித்துள்ளது.
அல வைகுந்த புரமுலு படத்தின் இசையமைப்பாளர் தமன் பகிர்ந்துகொண்ட டாப் 5 லிஸ்ட் இதோ..
178.7M STREAMS ALL NEW RECORD FOR AN SOUTH INDIAN ALBUM OF THE YEAR 🤍🏆 #AlaVaikunthapurramuloo #AVPL ✌🏽#UNSTOPPABLEAVPLALBUM 💪🏼 pic.twitter.com/zfS2IAHY2h
— thaman S (@MusicThaman) December 21, 2020