Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய கெட்டப்பில் விஜய். வைரலாகும் ரீசன்ட் ஃபோட்டோ

captain-miller-crew-thanked-cm update

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படக்குழு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், \”கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியதற்காக நாங்கள் தமிழ்நாடு அரசிற்கு மிகவும் தாழ்மையுடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்\” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “,