தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். கடந்த வாரம் பொங்கல் விருந்தாக வெளியான திரைப்படம் தற்போது வரை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலை ஈட்டி வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற இடங்களிலும் கேப்டன் மில்லர் படம் நல்ல வசூலை பெற்று வருவதாகவும் இதுவரை உலகம் முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தகவலால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்துடன் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் அருண் விஜயின் மிஷன் சாப்டர் ஒன் திரைப்படம் வெளியானது. மூன்று படங்களுமே பொங்கல் வின்னராக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
