தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வருகிறது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தில் தனுசுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சுதிக் கிருஷ்ணன், சிவராஜ் குமார் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் உறியடி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜயகுமார் இணைந்து இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று உறுதியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
#CaptainMiller Clarification⭐
Uriyadi #VijayKumar is Not Part Of Captain Miller & News Spreading in Social Media is FAKE⚠️
(Confirmed By Close Source)#Dhanush | #GVPrakash | #Arun
Festival Release.— Saloon Kada Shanmugam (@saloon_kada) February 25, 2023