Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு

captain-miller movie latest-update

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீவிரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படம் தொடர்பான அம்பேத்கலுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் திரைத் துறைக்கு வந்து 21 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு கேப்டன் மில்லர் படக்குழு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அப்டேட்களை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில், கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 2023ல் வெளியாகும் என்றும் இப்படத்தின் டீசர் ஜூலையில் வெளியாகும் என்று போஸ்டருடன் அதிகாரவபூர்வமாக தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.