Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு. வைரலாகும் பதிவு

captain-miller-movie latest update

“இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது. அதன்படி, ரசிகர் ஒருவர், \”தனுஷின் இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஓடுகிறது. இது கேப்டன் மில்லர் பட வெளியீட்டிற்கான முன்னோட்டமா?\” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தயாரிப்பு நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.