Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷிற்கு மாலை போட்டு மரியாதை செலுத்திய கேப்டன் மில்லர் தயாரிப்பாளர். வைரலாகும் பதிவு

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தனுஷுக்கு மாலை போட்டு பாராட்டினார். மேலும், படத்திற்கு பிளாக்பஸ்டர் ஓப்பனிங் வசூல் கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.