தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் வரலாற்று பாணியில் இந்தியர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையிலான போரை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான துப்பாக்கி குண்டுகள் மற்றும் குண்டுவெடிப்புகளுடன் பெரிய அளவில் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், ஜான் கொக்கன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாக்கி வரும் இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்படி, இப்படத்தில் நடிகர் தனுஷ் அவருக்கான படப்பிடிப்பை மே மாதத்தின் இறுதிக்குள் முடிக்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில சண்டைக் காட்சிகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரது இயக்கத்தில் பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாக இருக்கும் “D50” திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரலாற்று பாணியில் உருவாக இருக்கும் படத்தை இந்த ஆண்டு இறுதியில் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.