தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு தென்காசி, கேரளா பகுதிகளில் உள்ள காடுகளில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது குற்றாலத்தில் நடைபெற்று வருவதாக புதிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
#CaptainMiller Shooting Currently Happening At Courtallam..🤙🏾🔥#Dhanush | #SundeepKishan | #GVP
A Perfect Pan-India Project💥
Summer 2023 Release✌🏾— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 19, 2023