அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் ‘கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. இதில் இடம்பெறும் தனுஷின் கதாபாத்திரத்தின் தோற்றமும் மிக வித்தியாசமாக இருக்கும் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகிறது.
இந்தப் படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு இருந்த இப்படத்திற்கான பூஜை மிகவும் பிரம்மாண்டமான அரங்கில் கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் இப்படத்தை சேர்ந்த அனைத்து திரை நட்சத்திரங்களும் பங்கேற்றி உள்ளனர். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் பூஜையின் புகைப்படங்களை நடிகை பிரியங்கா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#CaptainMiller 🔥 https://t.co/kK55RmcB0h
— Priyanka Mohan (@priyankaamohan) September 22, 2022