Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் படைத்த சாதனை.வைரலாகும் பதிவு

captain-miller-teaser-views-update

கோலிவுட் திரையுலகில் பன்முகத் திறமைகளுடன் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. பிரியங்கா அருள் மோகன், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் நேற்றைய தினம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படத்தின் ரிலீஸ் தேதியுடன் வெளியிட்டு இருந்தது.

வசனமே இல்லாமல் வெறும் துப்பாக்கி மற்றும் குண்டுகள் சத்தத்துடன் மிரட்டலாக வெளியாகி இருந்த இப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 23.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கோலிவுட்டின் 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.