தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ். தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் ஆகிய திரைப்படங்கள் இந்த பொங்கலுக்கு நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இந்த இரண்டு திரைப்படங்களும் நேற்று வெளியாகிய நிலையில் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.
அதாவது அயலான் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ஐந்து முதல் ஆறு கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படம் 8 முதல் 10 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு படங்களுக்கும் அதன் பட்ஜெட்களோடு ஒப்பிடுகையில் இது நல்ல ஓப்பனிங் ஆகவே பார்க்கப்படுகிறது.
இன்று முதல் தொடர் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
