தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். அதன் பிறகு தேமுதிக கட்சியை தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் நூறு வருடம் வாழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் சொன்ன தகவல் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் பின்னடைவு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவரின் மகன் விஜய் பிரபாகரன் பேட்டி!#Vijayakanth #VijayPrabhakaran #madurai #meenakshiammantemple #Politics #dmdk #gemtv #geemnews #tamilnadu #Chennai #TamilNews #TamilnaduNews pic.twitter.com/8j9O8oJQqQ
— GEM TV (@GemTv7) August 21, 2023