Tamilstar
Health

முகப்பரு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களும் தீர்வுகளும் !

முகப்பரு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.

முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.

சோற்றுக்கற்றாழை 1 துண்டு, செஞ்சந்தனம் 5 கிராம், வெள்ளரிக்காய் 2 துண்டு, சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.

காரட் 2 துண்டு, பாதாம் பருப்பு 2, தயிர் 1/2 கப் இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் குணப்படுத்த வெந்தயம் மிகவும் இதவுகிறது. கொதிக்கும் தண்ணீரில் 1 தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அந்த வெந்தயத்தை நன்கு கூழாக்கி முகத்தில் தடவி இரவு முழுவதும்வைத்து கொண்டு, பின்பு மறுநால் காலை வெதுவதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

ஆலிவ் எண்ணெய்யுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.