Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த எவிக்‌ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது – சனம் ஷெட்டிக்கு ஆதரவு குரல் எழுப்பிய பிரபலம்

Celebrity who raised voice in support of Sanam Shetty

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சனம் ஷெட்டி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் ரசிகர்களின் பேராதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. சனம் ஷெட்டிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் சனம் வெளியேறியது அதிர்ச்சியளித்தது. வெளியேறிய பின் கமல்ஹாசன் முன்னிலையில் சனம் இதர போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆரி, “நீ ஒரு ட்ரூ வாரியர் சனம். இந்த எவிக்‌ஷன் உனக்கு நடந்திருக்கக் கூடாது” என கமல் முன்பாகவே ஓப்பனாக சொல்லிவிட்டார். இதற்கு பதிலளித்த சனம் மக்களின் தீர்ப்பை மதிப்போம் என கூலாக சொல்லிவிட்டு வெளியேறினார்.