திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்து முடிவு இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாஸ்டர் போன்ற படங்களின் ரிலீஸ் தேதியும் தெரிய வரும்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி தீவிரமாக பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவை எதிர்த்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் திரையரங்குகள் பள்ளி கல்லூரிகள் போன்றவை மட்டும் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இதில் தென்னிந்திய திரையரங்க உரிமையாளர்களும் பங்கேற்கவுள்ளனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் ஜூம் App மூலமாக அனைத்து திரையரங்க உரிமையாளர்கள் உடன் பேசினார்.
அனைவரும் மத்திய அரசின் உடனான பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். எல்லோரும் ஒருமனதாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கும் அதனை மாநில அரசும் ஏற்றுக் கொள்ளும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
திரையரங்குகள் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியானதும் மாஸ்டர் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தேதி வெளியாவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இதனால் விஜய் ரசிகர்கள் விரைவில் மாஸ்டர் பட அப்டேட்டை எதிர்பார்க்கலாம்.