ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரதி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சைத்ரா. அந்த சீரியலில் அவருக்கு பெரிய ரீச் கிடைத்தது, தமிழில் முக்கிய சீரியல் நடிகையாக மாறினார்.
தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணமும் நடந்தது, பின் நடிப்பாரா இல்லையா என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. தொடர்ந்து நடித்துவந்த சைத்ரா யாரடி நீ மோகினி சீரியலுக்கு பின் சன் தொலைக்காட்சியில் கயல் என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு ரசிகர் இன்ஸ்டாவில் அஜித், விஜய், சூர்யாவில் யாரை பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்கு சைத்ரா, ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கும், அதைப்பார்த்து ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
நான் ஒருமுறை அஜித் அவர்களை சந்தித்துள்ளேன், மிகவும் பிடித்திருந்தது, நல்ல மனிதர். அவரைப் பார்த்துள்ளதால் அஜித்தை போல் இருக்க ஆசைப்படுகிறேன் என பதில் கூறியுள்ளார்.