தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடிக்க ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு பி வாசு இயக்கத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ஆனால் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.
அதே சமயம் சந்திரமுகியாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் ஏனென்றால் இந்த படத்தில் ஜோதிகா நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு பதிலாக நடிகை ராசி கண்ணா அல்லது ஆண்ட்ரியா நடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேசமயம் படத்தின் சூட்டிங் கையில் வெகு விரைவில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருகிறது என்பதும் தெரியவந்துள்ளது.