தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க சந்திரமுகி படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது.
இந்த படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த குழந்தை நட்சத்திரம் அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. தற்போது திருமணம் ஆகி குடும்பப் பெண்ணாக மாறிய நிலையில் 18 வருடத்திற்கு பிறகு சின்னத்திரை சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் செம மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் லாயராக என்ட்ரி கொடுக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருந்த போதிலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்துவிடும்.
View this post on Instagram