தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஏப்ரல் 14 என்பதை ஏப்ரல் 13-ஆம் தேதி ஆக படக்குழு மாற்றம் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திடீரென படக்குழு ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்வதற்கான காரணங்கள் என்ன என்பதை இன்னும் தெரி வரவில்லை.