தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முறை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரானா வைரஸ் காரணமாக போட்டியாளர்களுக்கு பல்வேறு புதிய கண்டிஷன்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கொரானா பரிசோதனை செய்து இருப்பது அவசியம்.
கொரானா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு ஒரு வாரம் முன்னதாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் பல கண்டிஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல் இதுவரை 100 நாட்கள் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் இந்த கொரானா வைரஸ் காரணமாக என்பது நாட்களாக குறிக்கப்பட்டுள்ளது.
மேலும் 16 பிரபலங்கள் கலந்து கொள்வதற்கு பதிலாக இம்முறை 12 பிரபலங்கள் மட்டுமே பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
அந்தப் பன்னிரெண்டு பிரபலங்கள் யார் யார் என்பதை உறுதி செய்யும் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.