தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித்து கோமாளி. இதுவரை நான்கு சீசன் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
இது குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் நடுவராக பங்கேற்று வந்த செஃப் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும் புதிய நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதாகவும் கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது செஃப் தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் இணைந்து புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் இல்லாமல் குக் வித் கோமாளி இல்லை, அப்படின்னா இனிமே அதுக்கு மூடு விழா நடத்த வேண்டியதுதான் என ரசிகர்கள் வருத்தத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram