தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செல்லம்மா. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த சீரியலில் ஹீரோவாக அர்ணவ் நடித்து வருகிறார். அவர் சன் டிவி செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் திவ்யா ஸ்ரீகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திவ்யா தற்போது கர்ப்பமாக இருந்து வரும் வேலையில் அர்ணவ் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
அவர் தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாக கூறிய நிலையில் பதிலுக்கு திவ்யா மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் அர்ணவ். பிறகு அர்ணவ் திருநங்கை ஒருவர் உட்பட பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பது தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இப்படியான நிலையில் அவர் செல்லம்மா சீரியலில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும் இனி அவருக்கு பதிலாக இந்த சீரியலில் தெலுங்கு நடிகர் திலீப் ஆர் செட்டி என்பவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் அவரது காட்சிகள் ஒளிபரப்பாகும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியே ஹீரோயினியாக நடித்து வந்த அன்ஷிதாவையும் தூக்கி வெளியே போடுங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.