தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சேரன். தரமான படங்களை கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் சேரனின் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது.
சமூக வலைதளங்களில் தன்னுடைய பழைய நினைவுகளை பற்றி அடிக்கடி பேசி வருகிறார் சேரன். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வாய்ப்பு கிடைத்தும் விஜய் படத்தை தவற விட்டது குறித்து வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில் ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய் தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.
அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.
இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லி விட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும் போது தெரிவிப்பேன்.
அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும் தான்.. அவ்வளவு டெடிகேஷன். அதுவேதான் இன்று அவரின் உயரம் என பதிவிட்டுள்ளார்.
ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது.. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார் . நான் தான் தவமாய்தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.#ThalapathyVijay @Jagadishbliss https://t.co/AxdY12Y6tK
— Cheran (@directorcheran) June 24, 2020
அந்த தவறை நான் செய்திருக்க கூடாது.. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.. இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன்.. ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.
— Cheran (@directorcheran) June 24, 2020
அவரிடம் ஆட்டோகிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது.. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை.. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான்.. அவ்வளவு டெடிகேஷன்… அதுவே இன்று அவரின் உயரம்..
— Cheran (@directorcheran) June 24, 2020