Tamilstar
News Tamil News

அருமை.. சூர்யாவை பாராட்டிய சேரன் – காரணம் என்ன? தீயாக பரவும் பதிவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா‌‌. நடிகராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராக சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சாத்தான் குளத்தில் போலீசாரின் கஸ்டடியில் இருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புவோம் என கூறியிருந்தார்.

இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான சேரன் ட்விட்டர் பக்கத்தில் @Suriya_offl கைகோர்த்ததற்கு நன்றி.

அருமையான கடிதம். அஹிம்சை முறையில் எடுத்து சொல்வோம். அரசிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விண்ணப்பமாக முன்வைப்போம். அனைவரின் தேவை இதுவென அறியும் போது அரசும் தன்னை மாற்றிக் கொள்ளும் நம்புவோம்.