Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜா. நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்

chief minister m k stalin meet bharathi raja in our house

தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர்களில் முன்னணி இயக்குனராக வளம் வரும் பாரதிராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு முன்பே விமான நிலையத்தில் மயங்கி விழுந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் வீடு திரும்பி இருந்த நிலையில் மீண்டும் உடல் நலம் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வந்தார்.

பரிசோதனை செய்தத்தில் அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பின்னர் தி நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமந்த கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கும் பாரதிராஜாவிற்கு தீவிரமாக சிகிச்சை நடைபெற்றது. தற்பொழுது சிகிச்சை முடிந்து உடல் நலம் சீரான பாரதிராஜா நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதற்கு முன்பு பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த போதே தொலைபேசியின் மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் சென்று நலம் விசாரித்திருக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

chief minister m k stalin meet bharathi raja in our house
chief minister m k stalin meet bharathi raja in our house