தமிழ் திரையுலகில் தன் மெல்லிய குரலால் பல பாடல்களை அனைவரையும் கவர்ந்தவர் பாடகி சின்மயி. வட இந்திய பாடகிகள் இங்கு வரவால் சின்மயிக்கான வாய்ப்புகள் குறைந்ததோ என்பது ரசிகர்களின் கேள்வி.
96 படத்தில் காதலே காதலே என அவர் பாடிய பாடல் இன்னும் நம் அனைவரின் மனங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்ற மொழி சினிமாக்களிலும் சின்மயி பாடி வருகிறார்.
இந்நிலையில் இணையதளத்தில் ரசிகர்களின் விருப்பத்திற்காக 1700 பாடல்களை பாடி அதன் மூலம் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி பெற்று 1100 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்கள் விருப்ப பாடல்களை பாட சொல்ல அதற்கு சின்மயி உங்களுக்கு பிடித்த பாடலை நான் பாடுகிறேன், அதற்கு பதிலாக நீங்கள் மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய நிதி தரலாமே என பதிவிட அப்படி தொடங்கிய இந்த செயல் பல மக்களுக்கு உதவி செய்துள்ளது.