Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி

Chinnathambi 30th Anniversary Celebration - Khushboo

தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. நேரம் வேகமாக பறக்கிறது . பி வாசு சாருக்கு எப்போதும் நன்றி உள்ளவளாக இருப்பேன். இசைஞானி இளையராஜா, தயாரிப்பாளர் கே பாலு (சமீபத்தில் அவரை இழந்தோம் ) மற்றும் பிரபு சார் அனைவருக்கும் நன்றியும் அன்பும்’ என பதிவிட்டுள்ளார்.