Tamilstar
News Tamil News

ராதிகாவின் சீரியலில் முக்கிய மாற்றம்! இனி இவர் தானாம்! முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்

கொரோனா ஊரடங்கு, பொது முடக்கத்தால் சினிமா, சீரியல் துறை மிகவும் பாதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின் அண்மையில் சில நிபந்தனைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அரசு அண்மையில் அனுமதியளித்தது.

சீரியல் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை ராதிகா. சின்னத்திரையில் நடித்தும், தயாரித்தும் வரும் இவர் சித்தி 2 சீரியலில் நடித்து வந்தார்.

கொரோனாவால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டத்தில் சித்தி சீரியலில் முந்தய பாகம் ஒளிபரப்பானது.

இந்நிலையில் ராதிகாவின் மகள் ரேயான் சீரியல் குறித்து பதிவிட்டுள்ளார். விரைவில் சித்தி 2 சீரியல் ஒளிப்பரப்பாகும் என தெரிவித்துள்ளார்.

சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக நடிகர் பொன் வண்ணன் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு பதிலாக இனி நடிகர் நிழல்கள் ரவி நடிப்பதாக தெரிகிறது.