கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கவுள்ள படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தயாராகி உள்ளது. இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்த்தது. ‘சியான் 61’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் பா.இரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் கவனம் செலுத்தியதால் ‘சியான் 61’ படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமானது.
இந்நிலையில் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் ‘சியான் 61’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ‘மைதானம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்றும் இவர் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை போன்று முழுக்க விளையாட்டை மையப்படுத்தி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.