Tamilstar
News Tamil News

சீயான் 60 திரைப்படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் நடிகர் தனுஷ் உடன் இவர் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் வெளிவர தயாராகவுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் விக்ரமை வைத்து சீயான் 60 திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் தற்போது ஒளிப்பதிவாளர் ஷெராஸ் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார்.

மேலும் இவர் அவள், ஜில் ஜங் ஜக், ராக்கி மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.