விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் சீயான் 60. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்று ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்திருந்தது. இந்நிலையில் இதை குறித்து செம மாஸ் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
ஆம் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா நடித்து வெளிவந்த ஜிகுருதண்டா படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த சீயான் 60 என்று கூறுகின்றனர்.
மேலும் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்தில் தான் நடிகர் விக்ரம் நடிக்க போகிறார் என்று சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.