மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று அவரை பாராட்டி இருக்கிறார்.
இயக்குனர் மாரி செல்வராஜ், கர்ணன் படத்தை தொடர்ந்து விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாக இருப்பதாக கூறப்படும் இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் தயாரிக்கிறார்.