Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.. வைரலாகும் அப்டேட்

chiyaan-vikram-in-upcoming-movies update

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் ஒருவராக வலம் வருகிறார் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வெளியாகி மகான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்து பல்வேறு இயக்குனர்களுடன் கூட்டணி அமைத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் இவர் மீண்டும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 chiyaan-vikram-in-upcoming-movies update

chiyaan-vikram-in-upcoming-movies update