Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டெல்லியை தொடர்ந்து கொச்சினுக்கு படையெடுத்த சோழர்கள்.வைரலாகும் புகைப்படம்

cholas-next-stop-for-ps2-promotion-update

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வளம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு படக்குழு தீவிரமாக பிரமோஷன் செய்து வரும் நிலையில் PS2 நடிகர்கள் ஒவ்வொரு இடமாக சென்று பிரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் டெல்லி சென்று இருந்த படகுழுவினர்கள் தற்போது அடுத்த கட்டமாக கொச்சின் சென்று இருக்கின்றனர். இதனை புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்டு புதிய தகவலாக பகிர்ந்து இருக்கிறது.