பிரபல நகைச்சுவை நடிகர் குணச்சித்திர கலைஞருமான சின்னி ஜெயந்த்-இன் அம்மா மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.
திரையுலக வாரிசுகள் மிக எளிதில் சினிமாவில் நுழைய சுலபமாகவாய்ப்பு இருந்தாலும். ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆட்சிப் பணியில் ஆர்வம் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயமாக உள்ளது.
இவர் பள்ளிப் படிப்பு கல்லூரி படிப்பு யுபிஎஸ்சி பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் சென்னையிலேயே முடித்திருக்கிறார்.
இவர் “என்னுடைய வெற்றிக்கு எனக்கு பக்கபலமாக இருந்த எனது குடும்பம் தான் காரணம் என்றும் நான் 75 வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தனது பேட்டியில் கூறியுள்ளார்.