Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

CISF official stops Salman Khan outside the Mumbai airport

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் கிளம்பி வருகின்றனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், நடிகை காத்ரீனா கைப் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யாவில் நடைபெற உள்ள ‘டைகர் 3’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள சில தினங்களுக்கு முன்னர் புறப்பட்டனர்.

மும்பை விமான நிலையத்தில் சல்மான் கான் கருப்பு நிற டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு காரில் இருந்து மாஸ்க் அணியாமல் இறங்கினார். சல்மான் கானை பார்த்ததும் ஏகப்பட்ட ரசிகர்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க ஆரம்பித்தனர். திடீரென அங்கே ஒரு பெரிய கூட்டமே சூழ் ந்தது.

உடனடியாக மாஸ்க் அணிந்து கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டார் சல்மான் கான். பின்னர், தனிப் பாதை இல்லை என்பதை அறிந்த அவர், வரிசையில் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு பயணிகளையும் சோதனை போட்டு வந்த நிலையில், சோதனைக்கு நிற்காமல் செல்ல மாஸ்க்கை கழட்டி காவலர்களுக்கு முகம் தெரிவது போல உள்ளே நுழைய முயன்றார்.

ஆனால், ஒரு இளம் சி.ஐ.எஸ்.எஃப் காவலர், சல்மான் கான் சோதனையை தவிர்த்து விட்டு, விமான நிலையத்துக்குள் உள்ளே நுழைய முயன்றதை அறிந்து உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி, சார் இந்த பக்கம் போங்க சோதனை செய்யணும் எனக் கூறியதை அடுத்து, நடிகர் சல்மான் கான் செக்கிங் பணி நடைபெறும் பக்கத்திற்கு திரும்பினார்.

சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் சல்மான் கானையே தடுத்து நிறுத்தி தனது கடமையை சரியாக செய்த அந்த காவலரை ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஒவ்வொரு அதிகாரியும் இவரை போலவே இருந்தால் நாடு நிச்சயம் முன்னேறும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.