கோலிவுட் திரை வட்டாரத்தில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் விஜய் மற்றும் சூர்யா. இருவருமே தங்களது நடிப்பு திறமையால் தங்களுக்கு என தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றனர். விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல் சூர்யாவும் வணங்கான், சூர்யா 42 போன்று ஒரு சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய்-சூர்யா ரசிகர்களுக்கு இடையே ட்விட்டர் பக்கத்தில் திடீரென்று மோதல் வெடித்துள்ளது. எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் விஜய்-அஜித் ரசிகர்களின் இடையே சண்டை வருவதும் அது ட்ரெண்டிங் ஆவதும் வழக்கமாக இருக்கும் ஆனால் தற்போது வித்தியாசமாக விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு இடையே மோதல் வெடித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் பக்கத்தில் விஜய் ரசிகர்கள் சூர்யாவை #Failed out Surya என்று பதிவிட அதற்கு சூர்யா ரசிகர்கள் விஜய்யை #Pan world clown Vijay என்று பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த பரபரப்பான தகவல் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Suriya Fans >>>>> Vijay Fans 🦥 in every aspects#PanWorldClownVijay #AK61 pic.twitter.com/xzS4UV2rM7
— HarishAK (@HarishAk22) September 18, 2022
Vijay Fans Now ~ 👇🏻#FieldOutFrogSuriya pic.twitter.com/miD8PWBjDR
— ᴊᴇʀᴏᴍᴇ (@JudeJerome_Offl) September 18, 2022