Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தல தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய MK ஸ்டாலின்..இணையத்தில் வைரலாகும் பதிவு

CM m-k-stalin-tweet-about-ms-dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளான இன்று அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மு க ஸ்டாலின் அவர்கள் தோனியை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

“பிறந்தநாள் வாழ்த்துகள்” எம்.எஸ்.தோனி. எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர உங்களின் இணையற்ற சாதனைகள்தான் நம்பிக்கையை அளித்துள்ளது. நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.